Tuesday, June 29, 2021

உங்கள் நிறுவனத்தில் தூங்கும்‌ இலாபத்தை விழிப்படைய செய்ய வேண்டுமா ?


 உங்கள் நிறுவனத்தில் தூங்கும்‌ இலாபத்தை விழிப்படைய செய்ய வேண்டுமா ?


அந்த நிறுவனத்தின் தலைவருக்கு நிறைய வரவு செலவுகள் இருந்தன, நிறைய முதலீடுகள் செய்து பல தொழில்களில் முன்னேற வேண்டும் என்று விரைவாக செயல்பட்டு கொண்டு இருந்தார். அப்போதுதான் ஒரு கட்டத்தில் பண நெருக்கடி வந்த போது சற்று யோசித்தார் ? வரும் இலாபம் எல்லாம் எங்கே போகிறது? என்று,  அப்போதுதான் அவர் நம்முடைய எலைட் நிறுவனத்தை தொடர்புகொண்டார் ! 


நாங்கள் சென்று அவருடைய இலாபம் எங்கே தூங்குகிறது, என்று ஆராயத்தொடங்கினோம். முடிவில் இடமும் கண்டுபிடிக்கப்பட்டது! ஆரம்பத்தில் அவரிடம் சொன்ன போது, அட போங்க சார், தொழில்ல இதெல்லாம் இல்லாம எப்படி என்று கேட்டார். ஆனால் இப்போது அவருக்கே ஆச்சரியம், அப்படி என்ன நடந்தது அந்த நிறுவனத்தில் நாங்கள் செய்தது என்ன? முதலீடு செய்வதாக நினைத்து அதிகமாக மூலப் பொருட்களை வாங்கி குவிந்திருந்த இடங்களை கண்டறிந்தோம். அவற்றை முறையாக வகைபடுத்தினோம். அதுதான் MMC - Material Management and Control.  இதன் மூலம் என்ன நடக்கும்,  இதுவரை ஆழம் தெரியாமல், தேவை புரியாமல் முதலீடு செய்து வந்த பணம் அனைத்தும் சேமிக்கப்பட்டு தொழிலின் வளர்ச்சிக்காகவும் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்காகவும் செயல்படுத்தப்படும். 


அதற்கு பிறகு என்ன நடந்தது? ஒருவழியாக இதுதான் பிரச்சனை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இப்போதுதான் முக்கியமான வேலை, அந்த பிரச்சனைக்கு தீர்வு கொடுக்க வேண்டும்! தீர்ப்பு யார் வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் அந்த தீர்ப்பு நிறுவனத்திற்கும், அங்கு பணிபுரியும் நண்பர்களுக்கும், அதைவிட வாடிக்கையாளர்களுக்கும் ஆரோக்கியமான தீர்ப்பாக இருக்க வேண்டும்‌. அப்படி பட்ட தீர்ப்பைதான் நாமும் வழங்கினோம். முதலில் மூலையில் கிடந்த அத்தனை மூலப்பொருட்களையும் ஒன்று விடாமல் கணக்கில் கொண்டு வந்தோம். இதனால் இதுவரை காணவில்லை,  தீர்ந்து விட்டது, என்று பல முறை மீண்டும் மீண்டும் ஆர்டர் கொடுத்த பல முக்கியமான விலை அதிகமான பொருட்களை கண்டறிந்த போது அந்த நிறுவனத்தின் தலைவர் ஒடி வந்து இத இத தான்‌ தேடிக்கொண்டிருந்தேன் என்று சொன்னதுதான் நாங்கள் செய்த பணியின்  வெற்றி. ஏனென்றால் அந்த ஒரு பொருள் மட்டும் பல இலட்சக்கணக்கான மதிப்பை கொண்டது. சரி எல்லாம் கணக்கில் கொண்டு வரப்பட்டது.


 அடுத்து என்ன ?  அன்றைக்கு முதல் கட்டமாக கணக்கில் எடுத்த பொருட்களை வரிசை படுத்தி, வகை படுத்தி எவற்றை எல்லாம் முதலில் வெளியேற்ற வேண்டும், எவற்றையெல்லாம் இப்போது வாங்க தேவையில்லை, என அடுத்த கட்ட வரிசை படுத்திய போது  ஆச்சிரியம் என்ன வென்றால் 80% பொருட்கள் அடுத்த 6 மாதத்திற்கு தேவையான அளவு கையிருப்பு இருந்தது. வெறும் 20% பொருட்களை மட்டுமே அடுத்த 6 மாதங்களுக்கு வாங்க வேண்டியதாக இருந்தது. இதுதான்‌ நாங்க சொல்ல விருப்பும் முக்கியமான‌ செய்தி, நீங்கள் அடைய வேண்டிய இலாபம் உங்களுடைய நிறுவனத்தில் தான் உறங்கிக்கொண்டு இருக்கிறது‌.  கடன் சுமையால் ஏற்கனவே மனம் வருந்தும் நிறுவனங்கள் அனைத்தும்  சிறப்பான வளர்ச்சியை அடைய வேண்டும் என்ற எண்ணம்தான் உங்கள் அனைவருக்காகவும் இந்த தகவல்களை பகிரச்செய்தது. 


சரி‌ உறங்கிக்கொண்டிருந்த இலாபத்தை கண்டிபிடித்து விட்டோம் அது மீண்டும் உறங்கிவிடாமல் பார்க்க வேண்டும் இல்லையா? அதற்கு என்ன செய்யலாம்?அதனைதான் இன்வென்டரி மேனேஜ்மென்ட் என்று சொல்கிறோம். நம்ம ஊரில் ஒரே ஒரு  கணக்குப்புள்ளைதான் எல்லாத்தையும் பார்ப்பார், ஆனால் மேலை நாடுகளில் இதற்கான பிரத்யேக படிப்பினை ஆய்வு செய்து படிக்க வேண்டும். அப்படி பல நிறுவனங்களில் ஆய்வு செய்து வெற்றிகரமான‌ மேலாண்மை பயிற்சி பெற்ற வல்லுநர்கள் மூலம் தான் நமது எலைட் நிறுவனம் பல நிறுவனங்களுக்கு சிறப்பாக சேவை செய்து வருகிறது. 


அப்படி‌ முறைப்படுத்த பட்ட பின்பு அந்த நிறுவனத்தின் இன்றைய நடைமுறை‌ என்னவாக இருக்கிறது ? முதலில் அந்த நிறுவனம் மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. இரண்டாவது அந்த நிறுவனத்தின்‌ தலைவர்‌‌ ஆனந்தமாகவும் உற்சாகமாகவும் இருக்கின்றார்‌. ஏனென்றால் இதுவரை யானைவாயில் போட்ட கரும்பு போல சாப்பிட்டு கொட்டு இருந்த நிறுவனம் தேவைக்கு மட்டும் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கிறது. நமக்கு மட்டும் அல்ல நிறுவனத்திற்கும் பிட்நஸ் முக்கியம் இல்லையா ?பணியாளர்களும் பொருட்களை குறைந்த நேரத்தில் கையாண்டு சிறப்பாக செயல்படுகின்றனர்‌. இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை வழங்க‌ முடிகிறது. 


உங்களுடைய வெற்றிகரமான பயணத்தை நாங்கள் பார்க்கும் போது  பெறும் மகிழ்ச்சியும் அதனால் அடையும் சமுதாயத்தின் வளர்ச்சியையும்  பார்க்கும் போது எந்த நிறுவனங்களை வேண்டுமாலும் தூக்கத்தில் இருந்து எழுப்ப கூடிய  சக்தி எங்களுக்கு  கிடைக்கிறது.


Friday, April 16, 2021

உங்கள் நிறுவனத்தில் பணியாளர்களின்‌ ஒத்துழைப்பை பெறுவது சவாலாக இருக்கிறதா ?


உங்கள் நிறுவனத்தில் பணியாளர்களின்‌ ஒத்துழைப்பை பெறுவது சவாலாக இருக்கிறதா ?

இன்றைய நிறுவனங்கள் அடுத்த கட்ட நிலைக்கு வளர வாய்ப்பு இருந்தும் வளர முடியாமல் தடுமாறுகின்றனர்.
இதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று நிர்வாகத்தில் இருந்து சொன்னால் எல்லாம் செய்து விடுவார்கள் என்று நினைத்து அனைத்தையும் நிர்வாகத்தின் சட்டங்களாக மாற்றி அதற்கு நிர்வாகியாக ஒரு அதிகாரியையும் நியமிப்பார்கள்.
ஆனால் அதிகாரி சொல்லுவார், சொல்லுவார்‌ சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால் பணியாளர்களிடமோ அல்லது பணிசெய்யும் இடத்திலோ எந்த மாற்றமும் ஏற்படாது.
உடனே நிர்வாகம் அதிகாரி சரியில்லை என்று நினைத்து அடுத்ததாக புது அதிகாரியை இறக்குமதி செய்யும். அவரும் ஆறு மாதகாலம் பார்த்துவிட்டு நடையை கட்டி விடுவார்...
இது போன்று‌ உங்களது நிறவனத்தில் தொடர்கிறதா ?
உங்களுக்கான சில வழிமுறைகள் இதோ !!
1. பணியாளர்களை நீங்கள் அதிகம் நம்புகின்றீர்கள் என்பதை அவர்களுக்கு‌ உணர்த்துங்கள்.
2. பணியாளர்கள் உங்கள் மீதும் உங்கள் நிறுவனத்தின் மீதும் எந்த அளவு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை உணருங்கள்.
3. எந்த ஒரு மாற்றத்தையும் உடனடியாக எதிர்பார்க்காதீர்கள்
4. உங்கள் நிறுவனத்திலும் நிர்வாகத்திலும் ஏற்படுத்த விரும்பும் மாற்றத்தின் நன்மைகளை அவர்களுக்கு உணரவையுங்கள்.
5. மாற்றத்தை விரும்பும் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தனியே பயிற்சிகள் கொடுத்து அவர்கள் அடைகின்ற பலன்களை உதாரணமாக்கி மற்றவர்களுக்கு புரிய வையுங்கள்.
6. உயர்நிர்வாகத்திற்கும் கடைநிலை பணியாளருக்கும் இடையே மேலாளர்கள் மற்றும் பிற நிர்வாகத்தினரின் தலையீடுகள் இன்றி உண்மைதன்மையை கண்டறியும் வகையில் பார்த்துக்கொள்ளுங்கள்.
7. ஏதேனும் பிரச்சனை எனில் அந்த வேலையில் அல்லது அந்த சம்பந்தப்பட்ட பிரிவில் இருக்கும் பணியாளர்களிடம் முதலில் ஆலோசனை செய்யுங்கள்.‌
8. நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் அவர்களது கருத்துக்களை வெளிப்படுத்த சுதந்திரம் கொடுங்கள்.
9. யார்‌ தவறு செய்தாலும் அவர்களை தனியே அழைத்து அறிவுரைகள் கூறுங்கள்.
10. யாரேனும் நல்லமுறையில் பணிபுரிந்தால் அவர்களை வெளிப்படையாக அனைவரது முன்னிலையிலும் பாராட்டுங்கள்..
இது வெறும் கொசுருதான் மிச்ச சொச்சம் நிறைய இருக்கு! உங்களுக்கான அனைத்து நிர்வாக மேலாண்மை குறித்த ஆலோசனைகளை எளிமையான‌‌ முறையில் நவீன வழியில் நமது Elite Management Consulting Services மூலம் பெற்று உங்களது மேலாண்மையை இரண்டு மடங்கும் உற்பத்தியை மூன்று‌ மடங்கும் உயர்த்துங்கள்.

நேற்று உருவான‌ சிறு நிறுவனங்கள், பல வருடங்களாக இயங்கும் உங்களது நிறுவனத்திற்கு போட்டியா ?




நேற்று உருவான‌ சிறு நிறுவனங்கள், பல வருடங்களாக இயங்கும் உங்களது நிறுவனத்திற்கு போட்டியா ?

தலைமுறைகள் கடந்து இயங்கி வரும் பாரம்பரியமான நிறுவனங்கள் கூட இன்றைய இளைய தலைமுறையினரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுவதுண்டு.
இப்படிப்பட்ட சூல்நிலைகளை எப்படி சமாளிக்கலாம். எப்படி மீண்டும் புதிய‌ பரிமாற்றத்தை ஏற்படுத்துவது. கீழே இருக்கும் வழிமுறைகள் உங்களுக்கு உதவலாம்.
1. பலகாலமாக ஒரு வாகனம், ஒரு‌ மேஜை என பல ஆண்டுகளாக ஒரு இடத்தில் இருந்தால் முதலில் உங்களது மனதிற்கு புதுமையை கொண்டுவாருங்கள்.
2. புதுமை என்றாலே அதிக செலவீனம் என்பது தவறு நவீனப்படுத்துவதால் உங்களது செலவுகளை குறைக்க முடியும் என்பதுதான்‌ உண்மை.
3. நவீனம் என்பது பயன்பாடு என்பதையும் தாண்டி பரிமாற்றம் என்பதை உணரவேண்டும் ஏனென்றால் உங்களை விட வேகமாக அனைவரும் அதற்கு ஏற்ப மாறுகின்றனர்‌ என்பதுதான்‌‌ உண்மை
4. நீங்கள் பாரம்பரியமான தொழில் செய்தால் மிகவும் நல்லது அந்த பாரம்பரியத்தின்‌ மதிப்பு மாறாமல் புதுமையான வடிவத்தில் உங்களது சேவையை வழங்கினால் போதும் அடுத்த சில நாட்களில் உங்களுடைய முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
5. மார்க்கெட்டில்‌ உள்ள மற்றவர்களை பார்ப்பதை விட‌ நேரடியாக உங்களது வாடிக்கையாளின் ஆலோசனைகளை‌ கேளுங்கள். பல வருடங்களாக உங்களுக்காக இருக்கும்‌‌ அவர்களுக்காக என்ன கொடுக்கலாம் என்று தீர்மானம் செய்யுங்கள்.
6. நீங்கள் ஏற்படுத்தும் புதுமையான முறைகள் பயன்பாட்டினை அதிகப்படுத்துவதோடு உங்களது உழைப்பையும் நேரத்தையும் பெரிதும் மிச்சப்படுத்தும்.
7. வாடிக்கையாளர்களை நீங்கள் அணுகவும் அவர்களை உங்களை அணுகவும் எளிமையான இனையத்தின் வழிமுறைகளை பின்பற்றலாம்.
8. புதுமையான முறைகள் மூலம் வாடிக்கையாளரின் தேவைகளை எளிதாக புரிந்து கொள்வதோடு அதற்கேற்ப சேவைகளையும் விரைவாக வழங்க முடியும்.
9. புதுமையாக தொழில்நுட்பங்கள் மூலம் வாடிக்கையாளரை சமமாக நடத்துவதோடு அவர்களது பங்களிப்பிற்கு ஏற்ற சலுகைகளையும் அளிக்க முடியும்.
10. ஒரு‌‌ நாளைக்கு ஒரு விஷயத்தை புதிதாக கற்று நிறுவனத்தில் செயல்படுத்துங்கள் அப்போது உங்களது நிறுவனத்தில் ஒரு வருடத்தில் 365 புது விஷயங்களை நீங்கள் செய்து விடுவீர்கள்.
Contact: 9940600860
For more info: www.myelite.in

Tuesday, March 23, 2021

நீங்கள் தங்களது தொழிலுக்கு முதலாளியா‌? அல்லது தங்களது நிறுவனத்திற்கு முதலாளியா‌?

 


இன்றை பெரும்பாலான நிறுவனத்தலைவர்களின் தலைவலி இது !
காலையில் இருந்து மாலை‌ வரை நான் அலுவலகத்தில் இருந்தால் தான்‌ சரியாக வேலைகள் நடக்கும் என்று எப்போதும் நாள் தவறாது உங்களது நிறுவனத்திலேயே இருப்பவரா‌ நீங்கள்.
அப்படியானால் உங்களிடம்‌ ஒரு முக்கியமான கேள்வி!
ஒரு குழந்தையை அதன் தந்தை தனியே விடாமல் தன்‌ கையிலேயே தூக்கி வைத்துக்கொண்டு இருந்தால் அந்த குழந்தை எப்படி‌ நடை பழகும் ? வளரும் ?
அதை போலத்தான் உங்கள் நிறுவனமும், உங்கள் குழந்தைதான். எப்போதும் பக்கத்திலேயே இருந்தால் உங்களது குழந்தை மட்டும் அல்ல, நிறுவனமும் சிறப்பான வளர்ச்சியை பெற முடியாது !
அப்படி என்ன‌ பாதிப்புகள் வரும் !!
1. உங்களது நிறுவனம் தனித்து இயங்க முடியாமல் போகும்.
2. உங்களது‌ ஊழியர்களால் தனித்து‌ சிந்திக்கவோ அல்லது செயல்படவோ இயலாமல் போகும்.
3. உங்களால்‌ உங்களது நேரத்தை அடுத்த கட்ட நிறுவனத்தின்‌ முன்னேற்றத்திற்கு செலவிட முடியாமல் போகும்.
4. உங்களது நிறவனத்தின்‌ கிளைகளை உருவாக்க பெரும் சவால்களை சந்திப்பீர்கள்.
5. அனுபவம் வாய்ந்த பணியாளர்களை கொண்டிருந்தாலும் தற்போதைய நவீன தொழில்நுட்பங்களை அவர்களிடத்தில் செயல்படுத்துவது சவாலாக இருக்கும்.
6. மேலும் பணியாளர்கள் நீங்கள் இருக்கும் போது ஒரு வகையிலும் நீங்கள் இல்லாத போது வேறு வகையிலும் செயல்படுவார்கள்.
7. சரியான செயல்திட்டங்கள் மற்றும் செயல்திறன் மதிப்பீடுகள் இல்லாததால் சிறப்பாக பணிபுரியும் பணியாளர்களின் செயல்பாடுகளும் குறையக்கூடும்
8. உங்களது நிறுவனத்திற்கு பிறகு தொடங்கிய புதிய நிறுவனங்களே உங்களுடைய போட்டியாளர்களாக வளர்ந்து விடுவார்கள்.‌
9. உங்களுடைய நிறுவத்தினை முன்னேற்ற கனவுகளும் ஆசைகளும் உங்களுக்கு இருக்கும். ஆனால் அதனை நிறைவேற்ற நேரமும் வாய்ப்பும் கிடைக்காமல் தவிப்பீர்கள்.
10. இறுதியாக இத்தனை பிரச்சனைகள் இருந்தும் அதனை யாரிடம் தெளிவு படுத்துவது என்பதும் உங்களுக்கு தெரியாமல் இருக்கும் ‌‌..
ஒருவேளை உங்களுக்கு மேற்கண்ட பிரச்சனைகள் இருப்பின் அதற்கான முழுமையான ஆலோசனைகளை நமது Elite Management Consulting Services மூலம் பெற்று உங்களது தொழிலை மேம்படுத்துங்கள்
உங்களுக்கான முதற்கட்ட‌ ஆலோசனைகளை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

உங்கள் நிர்வாகத்தை அடுத்த தலைமுறைக்கு‌ எடுத்து செல்கின்றீர்களா ?

உங்கள் நிர்வாகத்தை அடுத்த தலைமுறைக்கு‌ எடுத்து செல்கின்றீர்களா ?

இந்த பத்து விஷயங்கள் உங்களுக்கு நிச்சயமாக பயன்படும்.
இன்றைய தொழில்வளர்ச்சியின் முக்கியமான பிரச்சனைகள் இரண்டு
1. நிர்வாகத்தை ஏற்கும் புதிய தலைமுறையினர்
2. புதிதாக தொழிலை ஆரம்பிக்கும் இளைஞர்கள்
முதலாவது வகையினருக்கு, ஏற்கனவே அவர்களுக்கான தொழிலை அவர்களது குடும்பத்தினர் உருவாக்கி வைத்திருப்பார்கள். அதை அப்படியே அவர்களது அடுத்த தலைமுறைக்கு மாற்றம் செய்து கொடுத்து விடுவார்கள்.
அட இதுல என்ன கஷ்டம், நமக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று நீங்கள் நினைப்பது எங்களுக்கு புரிகிறது.
இங்கதான் பெரிய விஷயமே இருக்கிறது.
முதலில் இங்கு புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் நிர்வாகத்தில், ஒரு தலைமுறை மாற்றம் ஏற்படபோகிறது என்பதுதான். அனைத்து இடங்களிலும் அல்ல, அது நிர்வாகத்தில் மட்டும்.
எடுத்துக்காட்டாக இத்தனை நாள் நீங்கள் ஒட்டிய கார் வாகனத்தை இன்றைய இளைஞர்கள் கையில் கொடுத்தால் என்ன ஆகும்! அவர்களுடைய வேகத்திற்கு அந்த வாகனத்தை பயன்படுத்த நினைப்பார்கள்,ஆனால் வாகனம் பழைய காலத்தினுடையது என்பதால் அவர்களது வேகத்திற்கு இயங்குவது சற்று கடினமாக இருக்கும். மேலும் இப்போது இருக்கும் நவீன வசதிகளை அதில் புகுத்த நினைப்பார்கள். அழகாக இருக்க வேண்டும் என்பார்கள்,அதைவிட அவர்களது நண்பர்கள் உடைய வாகனத்தின் வசதிகள் இதில் இல்லை என்றும் நினைப்பார்கள்.
படிப்படியாக தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்றவாறு முழுவதுமாக அந்த வாகனத்தை மாற்றுவார்கள். அல்லது வேறு வாகனத்தை தேர்வு செய்ய முயல்வார்கள்.
இப்போது இந்த புதிய‌ மாற்றத்தில் அந்த புதிய தலைமுறைக்கு என்னென்ன சவால்கள் இருக்கும் என்பதை பார்க்கலாம்.
1. முதலில் அவர்கள் அந்த நிறுவனத்தை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும்.
2. அந்த நிறுவனத்தில் இருக்கும் அனைத்தையும் ( System) அங்கு உள்ளபடி புரிந்துகொள்ள வேண்டும்.
3. அதன் பிறகு அங்கு இருக்கக்கூடியவர்களுக்கு ஏற்றவாறு‌ தன்னுடைய வேகத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான பொறுமையும் வேண்டும்.
4. இது எல்லாவற்றையும் விட அங்கு பணிபுரியும் அனைவரும் புதிய மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும்.
இது முதல் கட்ட வேலைதான்‌, இரண்டாம் கட்டமாக...
5. இன்றை சூழலுக்கு ஏற்றவாறு உற்பத்தி முறைகளை கண்டறிய வேண்டும்.
6. அந்த உற்பத்தி முறைகளை சரியான முறையில் பயிற்சி அளிக்க வேண்டும்.
7. பயிற்சி பெற்றதை அனைவரையும் பின்பற்றுமாறு செய்ய வேண்டும்.
8. இந்த இடத்தில் இருக்கும் மிக சவாலான பிரச்சனை நிறுவனத்தின் பணியாளர்களை நவீன மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவைப்பது தான்.
9. இது வரை நிர்வாகத்தில் பணியாளர்களுக்கு கிடைத்த அங்கீகாரத்தை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
10.‌ அனைவருக்கும் நிறுவனத்தின்‌அடுத்த இலக்கினை தெளிவுபடுத்தி அதனை நோக்கி முன்னேற்ற பாதையில் செல்ல உற்சாகப்படுத்த வேண்டும்.
இருக்குற பிரச்சனைகளை பார்க்கவே நேரம் போதவில்லை இதுல இதெல்லாம் யார் செய்றது ?
உங்களுடைய இந்த கேள்வி நியாயமானது. ஆனால் இதனை ஏற்படுத்த வேண்டியது ஒரு சிறந்த நிர்வாகத்தின் கடமையும் கூட...
இதற்கான முழுமையான‌ பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் நம்முடைய‌ Elite Management Consulting மூலம் நீங்கள் பெற முடியும்..
உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்களோ அல்லது தீர்க்க வேண்டிய நிர்வாக பிரச்சனைகளோ இருந்தால் அதில் முக்கியமான ஒன்றை மட்டும் கீழே comment- ல் பதிவு செய்யுங்கள். உங்களுக்கான ஆலோசனைகளை நாங்கள் வழங்குகிறோம்.


Thursday, March 11, 2021

சுயதொழில் தொடங்கும் இளைஞர்களுக்கான 10 சவால்கள். (10 Challenges which are faced by Startups)


புதிதாக தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கான 10 சவால்கள் பற்றி பார்க்கலாம்..
1. மிக முக்கியமான சவால், எதற்காக இந்த தொழிலை தொடங்க வேண்டும் என்ற தெளிவும், கனவுகளும் இல்லாமல் இருப்பது.
2. சகமனிதர்களின் அனுபவங்களை ஆதாரமாக வைத்து மற்றவர்களை சார்ந்து சுய அனுபவம் இல்லாமல் தொழிலை தொடங்குவது.
3. சமுதாயத்தில் இப்போது தொடங்கும் தொழிலின்‌ தாக்கம் பற்றி அறியாமல் இருப்பது.
4. வாடிக்கையாளர்களின் தேவைகளை சரியாக ஆராயாமல் இருப்பது
5. மிக முக்கியமாக தங்களுக்கான வாடிக்கையாளர்களை கண்டறியாமல் பொத்தாம் பொதுவாக அனைவரையும் சார்ந்து இருப்பது.
6. திட்டமிடலில் ஒரு யதார்த்தமான மனபாங்கு, தன்னுடைய பலம், பலவீனம் பற்றியெல்லாம் ஆராயாமல் செயல்படுத்துவது.
7. தாங்கள் மேற்கொள்ளும் தொழிலின் அடிப்படை தன்மைகளையும், அதன் நன்மைகளையும், கொள்கைகள், கோட்பாடுகளையும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாகவும் முறையாகவும் வெளிப்படுத்தாமல் இருப்பது.
8. வெற்றிக்கு தன்னையும்‌ தோல்விக்கு மற்றவர்களையும் காரணம் காட்டுவது.
9. நேரத்தை சரியாக நிர்வகிக்காமல் இருப்பது.
10. மிக முக்கியமாக பணம்தான்‌ அனைத்திற்கும் முக்கியம் என்று நினைப்பது.
இது போன்ற மேற்கண்ட எந்த வகையான சவால்களை நீங்கள் சந்திந்தாலும் அதனை உடனே நமது Elite Management Consulting services மூலம் நிவர்த்தி செய்து வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறுங்கள்.

For more info:
Mobile : 9940600860

Elite தொழில் மலர் - 1