இன்றை பெரும்பாலான நிறுவனத்தலைவர்களின் தலைவலி இது !
காலையில் இருந்து மாலை வரை நான் அலுவலகத்தில் இருந்தால் தான் சரியாக வேலைகள் நடக்கும் என்று எப்போதும் நாள் தவறாது உங்களது நிறுவனத்திலேயே இருப்பவரா நீங்கள்.
அப்படியானால் உங்களிடம் ஒரு முக்கியமான கேள்வி!
ஒரு குழந்தையை அதன் தந்தை தனியே விடாமல் தன் கையிலேயே தூக்கி வைத்துக்கொண்டு இருந்தால் அந்த குழந்தை எப்படி நடை பழகும் ? வளரும் ?
அதை போலத்தான் உங்கள் நிறுவனமும், உங்கள் குழந்தைதான். எப்போதும் பக்கத்திலேயே இருந்தால் உங்களது குழந்தை மட்டும் அல்ல, நிறுவனமும் சிறப்பான வளர்ச்சியை பெற முடியாது !
அப்படி என்ன பாதிப்புகள் வரும் !!
1. உங்களது நிறுவனம் தனித்து இயங்க முடியாமல் போகும்.
2. உங்களது ஊழியர்களால் தனித்து சிந்திக்கவோ அல்லது செயல்படவோ இயலாமல் போகும்.
3. உங்களால் உங்களது நேரத்தை அடுத்த கட்ட நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு செலவிட முடியாமல் போகும்.
4. உங்களது நிறவனத்தின் கிளைகளை உருவாக்க பெரும் சவால்களை சந்திப்பீர்கள்.
5. அனுபவம் வாய்ந்த பணியாளர்களை கொண்டிருந்தாலும் தற்போதைய நவீன தொழில்நுட்பங்களை அவர்களிடத்தில் செயல்படுத்துவது சவாலாக இருக்கும்.
6. மேலும் பணியாளர்கள் நீங்கள் இருக்கும் போது ஒரு வகையிலும் நீங்கள் இல்லாத போது வேறு வகையிலும் செயல்படுவார்கள்.
7. சரியான செயல்திட்டங்கள் மற்றும் செயல்திறன் மதிப்பீடுகள் இல்லாததால் சிறப்பாக பணிபுரியும் பணியாளர்களின் செயல்பாடுகளும் குறையக்கூடும்
8. உங்களது நிறுவனத்திற்கு பிறகு தொடங்கிய புதிய நிறுவனங்களே உங்களுடைய போட்டியாளர்களாக வளர்ந்து விடுவார்கள்.
9. உங்களுடைய நிறுவத்தினை முன்னேற்ற கனவுகளும் ஆசைகளும் உங்களுக்கு இருக்கும். ஆனால் அதனை நிறைவேற்ற நேரமும் வாய்ப்பும் கிடைக்காமல் தவிப்பீர்கள்.
10. இறுதியாக இத்தனை பிரச்சனைகள் இருந்தும் அதனை யாரிடம் தெளிவு படுத்துவது என்பதும் உங்களுக்கு தெரியாமல் இருக்கும் ..
ஒருவேளை உங்களுக்கு மேற்கண்ட பிரச்சனைகள் இருப்பின் அதற்கான முழுமையான ஆலோசனைகளை நமது Elite Management Consulting Services மூலம் பெற்று உங்களது தொழிலை மேம்படுத்துங்கள்
உங்களுக்கான முதற்கட்ட ஆலோசனைகளை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.


