நேற்று உருவான சிறு நிறுவனங்கள், பல வருடங்களாக இயங்கும் உங்களது நிறுவனத்திற்கு போட்டியா ?
தலைமுறைகள் கடந்து இயங்கி வரும் பாரம்பரியமான நிறுவனங்கள் கூட இன்றைய இளைய தலைமுறையினரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுவதுண்டு.
இப்படிப்பட்ட சூல்நிலைகளை எப்படி சமாளிக்கலாம். எப்படி மீண்டும் புதிய பரிமாற்றத்தை ஏற்படுத்துவது. கீழே இருக்கும் வழிமுறைகள் உங்களுக்கு உதவலாம்.
1. பலகாலமாக ஒரு வாகனம், ஒரு மேஜை என பல ஆண்டுகளாக ஒரு இடத்தில் இருந்தால் முதலில் உங்களது மனதிற்கு புதுமையை கொண்டுவாருங்கள்.
2. புதுமை என்றாலே அதிக செலவீனம் என்பது தவறு நவீனப்படுத்துவதால் உங்களது செலவுகளை குறைக்க முடியும் என்பதுதான் உண்மை.
3. நவீனம் என்பது பயன்பாடு என்பதையும் தாண்டி பரிமாற்றம் என்பதை உணரவேண்டும் ஏனென்றால் உங்களை விட வேகமாக அனைவரும் அதற்கு ஏற்ப மாறுகின்றனர் என்பதுதான் உண்மை
4. நீங்கள் பாரம்பரியமான தொழில் செய்தால் மிகவும் நல்லது அந்த பாரம்பரியத்தின் மதிப்பு மாறாமல் புதுமையான வடிவத்தில் உங்களது சேவையை வழங்கினால் போதும் அடுத்த சில நாட்களில் உங்களுடைய முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
5. மார்க்கெட்டில் உள்ள மற்றவர்களை பார்ப்பதை விட நேரடியாக உங்களது வாடிக்கையாளின் ஆலோசனைகளை கேளுங்கள். பல வருடங்களாக உங்களுக்காக இருக்கும் அவர்களுக்காக என்ன கொடுக்கலாம் என்று தீர்மானம் செய்யுங்கள்.
6. நீங்கள் ஏற்படுத்தும் புதுமையான முறைகள் பயன்பாட்டினை அதிகப்படுத்துவதோடு உங்களது உழைப்பையும் நேரத்தையும் பெரிதும் மிச்சப்படுத்தும்.
7. வாடிக்கையாளர்களை நீங்கள் அணுகவும் அவர்களை உங்களை அணுகவும் எளிமையான இனையத்தின் வழிமுறைகளை பின்பற்றலாம்.
8. புதுமையான முறைகள் மூலம் வாடிக்கையாளரின் தேவைகளை எளிதாக புரிந்து கொள்வதோடு அதற்கேற்ப சேவைகளையும் விரைவாக வழங்க முடியும்.
9. புதுமையாக தொழில்நுட்பங்கள் மூலம் வாடிக்கையாளரை சமமாக நடத்துவதோடு அவர்களது பங்களிப்பிற்கு ஏற்ற சலுகைகளையும் அளிக்க முடியும்.
10. ஒரு நாளைக்கு ஒரு விஷயத்தை புதிதாக கற்று நிறுவனத்தில் செயல்படுத்துங்கள் அப்போது உங்களது நிறுவனத்தில் ஒரு வருடத்தில் 365 புது விஷயங்களை நீங்கள் செய்து விடுவீர்கள்.
Contact: 9940600860
For more info: www.myelite.in

No comments:
Post a Comment