உங்கள் நிறுவனத்தில் தூங்கும் இலாபத்தை விழிப்படைய செய்ய வேண்டுமா ?
அந்த நிறுவனத்தின் தலைவருக்கு நிறைய வரவு செலவுகள் இருந்தன, நிறைய முதலீடுகள் செய்து பல தொழில்களில் முன்னேற வேண்டும் என்று விரைவாக செயல்பட்டு கொண்டு இருந்தார். அப்போதுதான் ஒரு கட்டத்தில் பண நெருக்கடி வந்த போது சற்று யோசித்தார் ? வரும் இலாபம் எல்லாம் எங்கே போகிறது? என்று, அப்போதுதான் அவர் நம்முடைய எலைட் நிறுவனத்தை தொடர்புகொண்டார் !
நாங்கள் சென்று அவருடைய இலாபம் எங்கே தூங்குகிறது, என்று ஆராயத்தொடங்கினோம். முடிவில் இடமும் கண்டுபிடிக்கப்பட்டது! ஆரம்பத்தில் அவரிடம் சொன்ன போது, அட போங்க சார், தொழில்ல இதெல்லாம் இல்லாம எப்படி என்று கேட்டார். ஆனால் இப்போது அவருக்கே ஆச்சரியம், அப்படி என்ன நடந்தது அந்த நிறுவனத்தில் நாங்கள் செய்தது என்ன? முதலீடு செய்வதாக நினைத்து அதிகமாக மூலப் பொருட்களை வாங்கி குவிந்திருந்த இடங்களை கண்டறிந்தோம். அவற்றை முறையாக வகைபடுத்தினோம். அதுதான் MMC - Material Management and Control. இதன் மூலம் என்ன நடக்கும், இதுவரை ஆழம் தெரியாமல், தேவை புரியாமல் முதலீடு செய்து வந்த பணம் அனைத்தும் சேமிக்கப்பட்டு தொழிலின் வளர்ச்சிக்காகவும் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்காகவும் செயல்படுத்தப்படும்.
அதற்கு பிறகு என்ன நடந்தது? ஒருவழியாக இதுதான் பிரச்சனை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இப்போதுதான் முக்கியமான வேலை, அந்த பிரச்சனைக்கு தீர்வு கொடுக்க வேண்டும்! தீர்ப்பு யார் வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் அந்த தீர்ப்பு நிறுவனத்திற்கும், அங்கு பணிபுரியும் நண்பர்களுக்கும், அதைவிட வாடிக்கையாளர்களுக்கும் ஆரோக்கியமான தீர்ப்பாக இருக்க வேண்டும். அப்படி பட்ட தீர்ப்பைதான் நாமும் வழங்கினோம். முதலில் மூலையில் கிடந்த அத்தனை மூலப்பொருட்களையும் ஒன்று விடாமல் கணக்கில் கொண்டு வந்தோம். இதனால் இதுவரை காணவில்லை, தீர்ந்து விட்டது, என்று பல முறை மீண்டும் மீண்டும் ஆர்டர் கொடுத்த பல முக்கியமான விலை அதிகமான பொருட்களை கண்டறிந்த போது அந்த நிறுவனத்தின் தலைவர் ஒடி வந்து இத இத தான் தேடிக்கொண்டிருந்தேன் என்று சொன்னதுதான் நாங்கள் செய்த பணியின் வெற்றி. ஏனென்றால் அந்த ஒரு பொருள் மட்டும் பல இலட்சக்கணக்கான மதிப்பை கொண்டது. சரி எல்லாம் கணக்கில் கொண்டு வரப்பட்டது.
அடுத்து என்ன ? அன்றைக்கு முதல் கட்டமாக கணக்கில் எடுத்த பொருட்களை வரிசை படுத்தி, வகை படுத்தி எவற்றை எல்லாம் முதலில் வெளியேற்ற வேண்டும், எவற்றையெல்லாம் இப்போது வாங்க தேவையில்லை, என அடுத்த கட்ட வரிசை படுத்திய போது ஆச்சிரியம் என்ன வென்றால் 80% பொருட்கள் அடுத்த 6 மாதத்திற்கு தேவையான அளவு கையிருப்பு இருந்தது. வெறும் 20% பொருட்களை மட்டுமே அடுத்த 6 மாதங்களுக்கு வாங்க வேண்டியதாக இருந்தது. இதுதான் நாங்க சொல்ல விருப்பும் முக்கியமான செய்தி, நீங்கள் அடைய வேண்டிய இலாபம் உங்களுடைய நிறுவனத்தில் தான் உறங்கிக்கொண்டு இருக்கிறது. கடன் சுமையால் ஏற்கனவே மனம் வருந்தும் நிறுவனங்கள் அனைத்தும் சிறப்பான வளர்ச்சியை அடைய வேண்டும் என்ற எண்ணம்தான் உங்கள் அனைவருக்காகவும் இந்த தகவல்களை பகிரச்செய்தது.
சரி உறங்கிக்கொண்டிருந்த இலாபத்தை கண்டிபிடித்து விட்டோம் அது மீண்டும் உறங்கிவிடாமல் பார்க்க வேண்டும் இல்லையா? அதற்கு என்ன செய்யலாம்?அதனைதான் இன்வென்டரி மேனேஜ்மென்ட் என்று சொல்கிறோம். நம்ம ஊரில் ஒரே ஒரு கணக்குப்புள்ளைதான் எல்லாத்தையும் பார்ப்பார், ஆனால் மேலை நாடுகளில் இதற்கான பிரத்யேக படிப்பினை ஆய்வு செய்து படிக்க வேண்டும். அப்படி பல நிறுவனங்களில் ஆய்வு செய்து வெற்றிகரமான மேலாண்மை பயிற்சி பெற்ற வல்லுநர்கள் மூலம் தான் நமது எலைட் நிறுவனம் பல நிறுவனங்களுக்கு சிறப்பாக சேவை செய்து வருகிறது.
அப்படி முறைப்படுத்த பட்ட பின்பு அந்த நிறுவனத்தின் இன்றைய நடைமுறை என்னவாக இருக்கிறது ? முதலில் அந்த நிறுவனம் மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. இரண்டாவது அந்த நிறுவனத்தின் தலைவர் ஆனந்தமாகவும் உற்சாகமாகவும் இருக்கின்றார். ஏனென்றால் இதுவரை யானைவாயில் போட்ட கரும்பு போல சாப்பிட்டு கொட்டு இருந்த நிறுவனம் தேவைக்கு மட்டும் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கிறது. நமக்கு மட்டும் அல்ல நிறுவனத்திற்கும் பிட்நஸ் முக்கியம் இல்லையா ?பணியாளர்களும் பொருட்களை குறைந்த நேரத்தில் கையாண்டு சிறப்பாக செயல்படுகின்றனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை வழங்க முடிகிறது.
உங்களுடைய வெற்றிகரமான பயணத்தை நாங்கள் பார்க்கும் போது பெறும் மகிழ்ச்சியும் அதனால் அடையும் சமுதாயத்தின் வளர்ச்சியையும் பார்க்கும் போது எந்த நிறுவனங்களை வேண்டுமாலும் தூக்கத்தில் இருந்து எழுப்ப கூடிய சக்தி எங்களுக்கு கிடைக்கிறது.





